பச்சைத் திராட்சை ஜூஸ்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பச்சை திராட்சை (விதையில்லாதது) - 1/4 கிலோ
2. வெல்லப் பாகு - தேவையான அளவு
3. புதினா இலைகள் - 10 எண்ணம்
4. உப்பு - சிறிது
செய்முறை:
1. பச்சைத் திராட்சையை நன்றாகத் தண்ணீரில் கழுவி, மிக்ஸி ஜாரில் போடவும்.
2. அதனுடன் புதினா இலைகள், உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
3. அரைத்த சாற்றை மற்றொரு பாத்திரத்திற்கு வடிகட்டவும்.
4. வடிகட்டிய திராட்சைச் சாற்றில் சுவைக்கேற்பத் தேவையான அளவு வெல்லப்பாகு சேர்க்கவும்.
5. டம்ளரில் ஊற்றிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.