நெல்லிக்காய் கார சர்பத்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. நெல்லிக்காய் - 5 எண்ணம்
2. மிளகு - 1/2 தேக்கரண்டி
3. சீரகம் - 1/2 தேக்கரண்டி
4. ஓமம் - 1/4 தேக்கரண்டி
5. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
6. இஞ்சி - 1 துண்டு
7. கறிவேப்பிலை - சிறிது
8. மல்லித்தழை - சிறிது
9. புதினா - சிறிது
10. பெருங்காயம் - சிறிது
11. இந்து உப்பு - தேவைக்கேற்ப
12. எலுமிச்சைச் சாறு - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
1. நெல்லிக்காயைத் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.
2. மிளகு, சீரகம்ம் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழி, புதினா, இஞ்சி, ஓமம் முதலிய பொருட்களை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து தண்ணீர் சேர்த்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
3. நெல்லிக்காய்ச் சாறில் அரைத்து வறுத்த பொருட்களைக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
4. சுவைக்கேற்ப எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.