வாழைத்தண்டு ஜூஸ்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. வாழைத்தண்டு (பொடியாக நறுக்கியது) – 1 கப்
2. புளித்த மோர் – 2 கப்
3. உப்பு – தேவைக்கேற்ப
4. மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
5. பெருங்காயம் - 1 சிட்டிகை
6. மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
7. மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. வாழைத்தண்டுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் அரைத்து வடிகட்டவும்.
2. அதனுடன் மோர், மிளகுத்தூள், பெருங்காயம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
3. கடைசியாக மல்லித்தழை சேர்த்துக் குளிர வைத்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.