தர்பூசனி பானகம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. தர்பூசனி – 1 கீற்று
2. சுக்குப்பொடி – 1 சிட்டிகை
3. வெல்லம் – 50 கிராம்
4. ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை
5. ஐஸ்கட்டி – தேவையான அளவு.
செய்முறை:
1. தர்பூசனிப் பழத்தின் தோல், விதைகளை நீக்கிவிட்டு, சதைப் பகுதியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. நறுக்கிய தர்பூசனித் துண்டுகளை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. அத்துடன் ஐஸ்கட்டிகளைச் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
4. வெல்லத்தைப் பொடித்துத் தண்ணீர் விட்டு காய்ச்சி, கொதி வந்த பின் வடிகட்டி வைக்கவும்.
5. தர்பூசனிக் கலவையுடன் வெல்லச்சாறு, சுக்குப்பொடி, ஏலக்காய்த் தூள் சேர்த்து கலக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.