ராகி மோர்க்கூழ்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ராகி மாவு - 100 கிராம்
2. மோர் மிளகாய் - 2 எண்ணம்
3. புளித்த மோர் - 200 மி.லி (புளிப்பு குறைவாக இருக்க வேண்டும்)
4. கடுகு - 1/2 தேக்கரண்டி
5. எண்ணெய் - தேவையான அளவு
6. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ராகிமாவுடன் மோர், உப்பு சேர்த்துக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, மோர் மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.
3. தாளிசத்துடன் கரைத்த மாவுக்கரசலை ஊற்றி நன்கு கிளறி இறக்கவும்.(தேவையெனில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.