சாக்லெட் குல்பி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பால் – 2 கப்
2. பால் பவுடர் – 1 மேசைக்கரண்டி
3. சாக்லெட் (துருவியது) – 1 கப்
4. சர்க்கரை – 1/2 கப்
5. பிஸ்தா – சிறிது
செய்முறை:
1. பாலுடன் பால் பவுடரைச் சேர்த்துக் கட்டிப்படாமல் கிளறவும்.
2. ஒரு அகன்ற வாணலியில் அந்தப் பாலை ஊற்றி, மிதமான நெருப்பில் கொதிக்க விடவும். கொதிக்கும் போது அவ்வப்போது கிளறி விட வேண்டும்.
3. பாலானது சுண்டி சற்றுக் கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
4. சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, அதில் பிஸ்தா மற்றும் சாக்லெட்டை போட்டு, நன்கு கிளறிச் சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.
5. சாக்லெட் கரைந்ததும், அதனை ஒரு அகன்ற வாயுடைய பாத்திரத்தில் ஊற்றி, ஒரு மணிநேரம் குளிர்பதனப்பெட்டியில் வைக்க வேண்டும்.
6. பின்னர், அதனை எடுத்து மிக்ஸியில் போட்டு ஒருமுறை நன்கு அடித்து, பின் அதனை குல்பி மோல்ட்டில் ஊற்றி, அதன் நடுவே குச்சியை வைத்து, குளிர்பதனப்பெட்டியின் உறைவிடத்தில் (பிரீசர்) ஆறு மணிநேரம் வைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.