மாம்பழ ஜூஸ்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மாம்பழம் - 4 எண்ணம்
2. சர்க்கரை - 300 கிராம்
3. பால் (காய்ச்சி ஆறியது) - 2 தேக்கரண்டி
4. திராட்சை - 2 தேக்கரண்டி
செய்முறை:
1. மாம்பழங்களைத் தோல் சீவி, சதைப் பாகத்தை மட்டும் துண்டு செய்து கொள்ளவும்.
2. அதில் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. அக்கலவையில் பால் சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.
4. அரைத்த மாம்பழ விழுதில் திராட்சையைச் சேர்க்கவும்.
குறிப்பு: குளிர்பதனப்பெட்டியில் குளிர வைத்துப் பின்னர் பரிமாறலாம். பனிக்கட்டிகளை உடைத்துச் சேர்த்தும் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.