வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸ்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வெள்ளரிக்காய் - 1 எண்ணம்
2. இஞ்சி - 1 துண்டு
3. சர்க்கரை - 1 தேக்கரண்டி
4. சீரகப் பொடி - 1/2 தேக்கரண்டி
5. உப்பு - சிறிது
செய்முறை:
1. வெள்ளரிக்காயைத் தோலுரித்துச் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. இஞ்சியையும் சிறியதாக நறுக்கி வைக்கவும்.
3. வெள்ளரிக்காய்த் துண்டு, இஞ்சித் துண்டு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
4. பின்னர், அதில் உப்பு, சர்க்கரை, சீரகப் பொடி ஆகியவற்றுடன் தேவையான தண்ணீர் சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.
குறிப்பு:குளிர்ச்சியாக இருக்க வேண்டுமென்று விரும்பினால் சிறிது பனிக்கட்டித் துண்டுகளைச் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது குளிர்பதனப்பெட்டியில் குளிர வைத்துப் பின்னர் பரிமாறலாம். பனிக்கட்டிகளை உடைத்துச் சேர்த்தும் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.