ஆரஞ்சு பழச்சாறு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ஆரஞ்சு பழச்சாறு - 1 கோப்பை
2. சாக்கலேட் ஐஸ்கிரீம் - 1 மேசைக்கரண்டி
3. கோகோ தூள் - 2 தேக்கரண்டி
4. பனிக்கட்டிகள் - சிறிது
5. சர்க்கரை - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. ஆரஞ்சு பழச்சாறுடன் கோகோ தூள், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அடித்துக் கொள்ளவும்.
2. இதன் மீது ஐஸ் கட்டிகள், சாக்கலேட் ஐஸ்கிரீம் ஆகியவற்றை போட்டு மீண்டும் அடித்துக் கொள்ளவும்.
3. அப்படியே குளிர்ச்சியாகப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.