நன்னாரி சர்பத்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. நன்னாரிப்பொடி - 50 கிராம்
2. வெல்லம் - 250 கிராம்
3. எலுமிச்சை - 1 எண்ணம்
செய்முறை:
1. நன்னாரிப் பொடியை இரவில் ஊற வைத்து விடவும்.
2. ஊறவைத்தத் தண்ணீரை வடிகட்டி எடுக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து, நன்னாரி ஊறவைத்த தண்ணீரை ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்கவும்.
4. கொதிக்க வைத்த சாற்றுடன் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.
5. பின்னர் அதை ஆறவைத்துப் பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
குறிப்பு: 1. தேவையான போது இந்த நன்னாரி சர்பத்துடன், எலுமிச்சைச் சாறு, தண்ணீர், பனிக்கட்டிகள் சேர்த்துக் குடித்துக் கொள்ளலாம்.
2. நன்னாரி வேர், நன்னாரிப் பொடி நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். நன்னாரி வேராக இருந்தால், அதைப் பொடியாக அரைத்துக் கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.