ஜிஞ்சர் மோர்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மோர் – 500 மி.லி
2. பச்சை மிளகாய் – 1 எண்ணம்
3. இஞ்சி – சிறு துண்டு
4. கறிவேப்பிலை – சிறிது
5. மல்லித்தழை – சிறிது
6. பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
7. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. மோருடன் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்
3. அத்துடன் பொடியாக நறுக்கிய மல்லித்தழையைப் போட்டுக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: குளிர்ச்சி விரும்புபவர்கள் பனிக்கட்டித் துண்டுகளைச் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது இரண்டு மணி நேரம் குளிர்பதனப் பெட்டியினுள் வைத்துப் பின்னர் அருந்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.