சுரைக்காய் ஜூஸ்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. சுரைக்காய் - 1 எண்ணம்
2. மோர் - 1 கப்
3. எலுமிச்சை பழம் - 1 எண்ணம்
4. மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. சுரைக்காய்த் தோலைச் சீவி விட்டுச் சிறிய துண்டுகளாக நறுக்கியோ அல்லது துருவியோ வைக்கவும்.
2. எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
3. அடுப்பில் ஒரு கடாயை வைத்து சுரைக்காயைப் போட்டு லேசாக வதக்கி ஆற வைத்து கொள்ளவும். (எண்ணெய் எதுவும் ஊற்றக் கூடாது)
4. வதக்கிய சுரைக்காயை மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
5. வடிகட்டிய ஜூஸில் மோர், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து பருகலாம்.
குறிப்பு: குளிர்ச்சி விரும்புபவர்கள் பனிக்கட்டி அல்லது குளிர்ந்த நீரைக் கலந்து கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.