பப்பாளி மோர்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பப்பாளி பழம் (நறுக்கியது) – 1 கப்
2. தயிர் – 1 கப்
3. எலுமிச்சைப் பழச் சாறு – 2 தேக்கரண்டி
4. உப்பு – தேவையான அளவு
5. தேன் – 3 தேக்கரண்டி
6. மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி
7. புதினா இலை – சிறிதளவு
செய்முறை:
1. பப்பாளிப் பழத் துண்டுகள், தயிர் இரண்டையும் ஒன்றாக மிக்சியில் போட்டு கூழ் போன்ற கலவையாக்கவும்.
2. அடித்த கலவையை ஒரு டம்ளரில் ஊற்றி அதில் உப்பு, தேன், மிளகு தூள், புதினா இலை சிறிது சேர்த்து கலந்து பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.