மேங்கோ லஸ்ஸி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. மாம்பழத் துண்டுகள் (நறுக்கியது) - 1/2 கப்
2. தயிர் – 1/2 கப்
3. ஐஸ் கட்டிகள் – சிறிது
4. சர்க்கரை – 4 தேக்கரண்டி
5. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. தயிரை மிக்ஸி அல்லது மத்து கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும்.
2. அதனுடன் ஐஸ் கட்டிகள், உப்பு, மாம்பழத் துண்டுகள், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து, குளிர்பதனப் பெட்டியில் அரை மணி நேரம் வைத்திருந்து பின் பரிமாறவும்.
குறிப்பு: சர்க்கரைக்குப் பதிலாகத் தேனும் பயன்படுத்தலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.