வாழைத்தண்டு மோர்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. தயிர்- 1 லிட்டர்
2. இஞ்சிச் சாறு- 1 தேக்கரண்டி
3. எலுமிச்சை / புதினா இலை - சிறிது
4. பெருங்காயத்தூள் - சிறிது
5. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வாழைத்தண்டிலிருக்கும் நாரினை நீக்கித் துண்டு துண்டாக நறுக்கிச் சிறிது போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டி வைக்கவும்.
2. மீதமுள்ள தயிரைக் கடைந்து தாராளமாக நீர் ஊற்றிக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் குளிர வைக்கவும்.
3. இதில் வடிகட்டி வைத்துள்ள வாழைத் தண்டு சாற்றைக் கலக்கவும்.
4. இஞ்சிச்சாறு, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
5. எலுமிச்சை / புதினா இலையைக் கசக்கி மோர் சேர்க்கவும்.
குறிப்பு: குளிர்சாதனப்பெட்டியில் வைக்க இயலாதவர்கள், பனிக்கட்டிகளைச் சேர்க்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.