ரோஜா சர்பத்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. ரோஜா இதழ்கள் – 1/2 கப்
2. சர்க்கரை – 1/4 கப்
3. ஏலக்காய்ப் பொடி – 1 சிட்டிகை
4. எலுமிச்சைச் சாறு – 1 தேக்கரண்டி
5. மாதுளம் பழச் சாறு – 1/2 கப்
செய்முறை:
1. ரோஜா இதழ்களை நன்றாகப் பொடி செய்து, ஒரு பாத்திரத்தில், கொதிக்கும் வெந்நீர் ஒரு கப் சேர்த்து மூடி வைக்கவும்.
2. பத்து நிமிடங்களுக்குப் பின், அதை வடிகட்டிச் சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, மாதுளைச் சாறு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கலக்கி மேலே ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.