மாங்காய் சர்பத்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மாங்காய் (பெரியது) – 1 எண்ணம்
2. சர்க்கரை – 1/4 கிலோ
3. சீரகம் (வறுத்துப் பொடித்தது) – 1 தேக்கரண்டி
4. இந்துப்பு – 1/4 தேக்கரண்டி.
செய்முறை:
1. மாங்காயை நன்கு கழுவித் துடைத்து விட்டுக் கத்தியால் அதன் மேல் அங்கங்கே லேசாகக் கீறி விட்டுக் கொள்ளவும்.
2. பின் அதைத் தோல் நன்கு மிருதுவாகும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.
3. வெந்த மாங்காயை நன்கு ஆற விட்டுப் பின் தோலுரிக்கவும்.
4. ஒரு கரண்டியின் உதவி கொண்டு, சதைப்பற்றான பாகத்தை நன்கு வழித்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
5. இதை மிக்ஸியில் நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
6. சர்க்கரையை ஒரு கப் தண்ணீரில் கரைத்து, கல் மண் போக வடிகட்டிக் கொள்ளவும்.
7. பின் இந்தக் கரைசலுடன் மேலும் மூன்று கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.
8. வெல்லக் கரைசல் நன்கு கொதி வந்ததும், அரைத்த மாங்காய், சீரகப்பொடி, இந்துப்புப்பொடியைச் சேர்த்து, இலேசாகக் கொதிக்க விட்டு இறக்கி ஆற விடவும்.
9. நன்கு ஆறியதும் பாட்டில்களில் ஊற்றிக் குளிர்சாதனப் பெட்டியில் சேமித்துக் கொள்ளலாம். (வெளியில் வைத்திருந்தால் சீக்கிரம் கெட்டு விடும்)
10. பரிமாறும்போது அரை கப் சர்பத்துடன், அதன் அடர்த்திக்கேற்பக் குளிர்ந்த நீரைக் கலந்து, அத்துடன் பொடியாக நறுக்கிய புதினா இலைகளைத் தூவிப் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.