பானகம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. புளி – சிறிய எலுமிச்சை அளவு
2. வெல்லத்தூள் – 2 மேசைக்கரண்டி
3. ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி
4. சுக்குப்பொடி – 1/4 தேக்கரண்டி
5. மிளகுத்தூள் – 1/4 தேக்கரண்டி
செய்முறை:
1. புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும்.
2. கரைத்த புளி நீரில் வெல்லத்தூளைச் சேர்த்து, நன்கு கலக்கிவிடவும்.
3. வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் வடிகட்டவும்.
4. அதனுடன் ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும்.
5. பின்னர் அதனைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பருகவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.