வெள்ளரிக்காய் ஜூஸ்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. வெள்ளரிக்காய் (பெரியது) - 1 எண்ணம்
2. எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி
3. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வெள்ளரிக்காயைத் தோல் நீக்கிச் சுத்தமாக்கித் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. வெள்ளரித் துண்டுகளைப் பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
3. அரைத்த கலவையுடன், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துப் பருகலாம்.
குறிப்பு: குளிர்ச்சியை வேண்டுபவர்கள் அரை மணி நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தோ அல்லது பனிக்கட்டிக்கள் சேர்த்தோப் பருகலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.