கருப்பு திராட்சை ஜூஸ்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கருப்பு திராட்சை – 1 கப்
2. தேன் – 3 தேக்கரண்டி
3. கருப்பு உப்பு – 1 சிட்டிகை
செய்முறை:
1. திராட்சையை நன்கு நீரில் அலசிப் பின்னர் மிக்ஸியில் அதனைப் போட்டு, அதனோடு தேன், தண்ணீர் மற்றும் கருப்பு உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
2. பின்பு ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து, அதில் அரைத்த சாற்றினை ஊற்றி வடிகட்டிப் பின்னர் பரிமாறலாம்.
குறிப்பு: குளிச்சி விரும்புபவர்கள் குளிர்சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைத்திருந்தோ அல்லது பனிக்கட்டிகள் சேர்த்துக் கொண்டு அருந்தலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.