நன்னாரி சர்பத்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. நன்னாரி வேர் - 25 கிராம்
2. சர்க்கரை - 2 கப்
3. சிட்ரிக் ஆசிட் - 1/4 தேக்கரண்டி
4. சோடியம் பென்சோயேட் - 1 சிட்டிகை
சர்பத் தயாரிக்க
5. பாதாம் பிசின் - 10 கிராம்
6. எலும்பிச்சைப் பழம் -1
7. தேன் - தேவையான அளவு.
செய்முறை:
1. நன்னாரி வேரை நன்கு அலசி, நீரில் 24 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
2. அதன் பிறகு, அதனை வடிகட்டி அந்த நீருடன் சர்க்கரையையும் சிட்ரிக் ஆசிட்டையும் சேர்த்துச் சூடுபடுத்தவும்.
3. சர்க்கரை கரைந்ததும் மெல்லிய துணியால் அதை வடிகட்டிக் கொள்ளவும்.
4. பின்னர், அதில் சோடியம் பென்சோயட் சேர்த்துக் கலக்கி, உலர்ந்த பாட்டிலில் ஊற்றிவைக்கலாம்.
சர்பத் தயாரிப்பு
5. ஒரு பங்கு நன்னாரி சர்பத்துக்கு மூன்று பங்கு தண்ணீர்விட்டுப் பாதாம் பிசின், எலுமிச்சைச் சாறு, சிறிதளவு தேன் விட்டுப் பருகினால் சுவை அருமையாக இருக்கும்.
6. குளிர்ச்சி அதிகம் தேவைப்படுபவர்கள் பனிக்கட்டிகளை உடைத்துப் போட்டோ அல்லது குளிர்ந்த நீர் சேர்த்தோப் பருகலாம்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.