வெள்ளைப்பூசணி - வெள்ளரி ஜூஸ்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. வெள்ளைப்பூசணி - 200 கிராம்
2. வெள்ளரி - 250 கிராம்
3. எலுமிச்சைச்சாறு - 1 தேக்கரண்டி
4. இந்துப்பு - 2 சிட்டிகை
5. உப்பு - தேவையான அளவு
6. மிளகுத்தூள் - தேவையான அளவு
செய்முறை:
1. வெள்ளைப்பூசணி, வெள்ளரியை தோல் நீக்கிப் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. துண்டு வெள்ளரியைத் துருவித் தனியே வைக்கவும்.
3. மிக்சியில் நறுக்கிய வெள்ளைப்பூசணி, வெள்ளரி சேர்த்து அரைக்கவும்.
4. அரைத்த கலவையில் எலுமிச்சைச் சாறு, இந்துப்பு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
6. பெரிய டம்ளரில் ஊற்றி, மேலே துருவிய வெள்ளரியைப் போட்டுப் பருகலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.