மசாலா மோர்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. நெல்லிக்காய் - 1 எண்ணம்
2. இஞ்சி - 1 துண்டு
3. மாங்காய் - 1 துண்டு
4. கறிவேப்பிலை - சிறிதளவு
5. புதினா - சிறிதளவு
6. மல்லித்தழை சிறிதளவு
7. தயிர் - 1கப்
8. பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. நெல்லிக்காயைச் சிறிது தண்ணீரில் வேகவைத்து எடுக்கவும்.
2. வேகவைத்த நெல்லிக்காய், இஞ்சி, மாங்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் தெளித்து மெல்லிதாக அரைத்துக் கொள்ளவும்.
3. அரைத்த விழுதில் மீண்டும் அரைகப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
4. வடிகட்டிய விழுதுடன் ஒரு கப் தயிர், பெருங்காயத்தூள், தேவையான உப்பு சேர்த்துக் கலக்கிப் பருகுங்கள்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.