அருகம்புல் ஜூஸ்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அருகம்புல் - 1 கட்டு
2. இஞ்சி - சிறிய துண்டு
3. எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
4. தேன் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. அருகம்புல்லைத் தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்தி, சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. இஞ்சியை தோல் நீக்கிக் கழுவிக் கொள்ளவும்.
3. அருகம்புல், இஞ்சி ஆகியவற்றுடன் தேவையான தண்ணீரைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுக்கவும்.
4. அருகம்புல் சாறுடன், எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து பருகலாம்.
குறிப்பு: அருகம்புல் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மாலை வேளைகளிலும் பருகலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.