எலுமிச்சை - புதினா ஜூஸ்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. எலுமிச்சை - 1 எண்ணம்
2. நாட்டுச் சர்க்கரை - 50 கிராம்
3. புதினா (நறுக்கியது) - 2 தேக்கரண்டி
4. இஞ்சி - 1 துண்டு (சிறிது)
5. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. இஞ்சியைத் தோல் சீவி நறுக்கி அதனுடன் புதினா, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுது போல் அரைத்து எடுக்கவும்.
2. எலுமிச்சையை இரண்டாக நறுக்கிப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும்.
3. அரைத்து வைத்த விழுதுடன் நாட்டுச்சர்க்கரை, சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
4. பின்னர் அதனுடன் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக் கலக்கி வடிகட்டிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.