கேரட் - பப்பாளி ஜூஸ்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கேரட் - 1 எண்ணம்
2. பப்பாளிப் பழம் - 1 எண்ணம்
3. இஞ்சி - 1 சிறிய துண்டு
4. பால் - 1 கப்
5. நாட்டுச் சர்க்கரை - 50 கிராம்
6. ஐஸ் கட்டி - 5 (தேவைக்கு)
செய்முறை:
1. கேரட், இஞ்சியை கழுவி தோல் நீக்கிப் பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.
2. பப்பாளிப் பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
3. பப்பாளிப் பழத்துண்டுகளுடன் அரைத்து வைத்திருக்கும் கேரட், இஞ்சிக் கலவை, நாட்டுச் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.
4. பப்பாளிப் பழக் கலவையுடன் காய்ச்சி ஆற வைத்த பால், ஐஸ்கட்டி கலந்து பருகலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.