மசாலா மோர்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. தயிர் – 500 மி.லி
2. இஞ்சி – ஒரு சிறிய துண்டு
3. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
4. மல்லித்தழை – 1 கைப்பிடி அளவு
5. கறிவேப்பிலை – சிறிது
6. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. மல்லித்தழை, தோல் நீக்கிய இஞ்சித் துண்டுகள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
2. தயிரில் தண்ணீர் விட்டு கடைந்து மோராக்கவும்.
3. கடைந்த மோரில், அரைத்த விழுதைச் சேர்த்துக் கலந்து பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
4. பிறகு, வடிகட்டி எடுத்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.