புதினா இஞ்சி குளிர்பானம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. புதினா இலை - 15 எண்ணம்
2. இளம் இஞ்சி - சிறிய துண்டு
3. எலுமிச்சைச் சாறு - 1/2 தேக்கரண்டி
4. சர்க்கரை - 4 தேக்கரண்டி
5. குளிர்ந்த நீர் - 200 மில்லி
6. உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை:
1. புதினா, இஞ்சி, உப்பு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து மிக்சியில் அரைத்து விழுதாக்கவும்.
2. அரைத்து வைத்த விழுதை மீதமுள்ள குளிர்ந்த நீரில் கரைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கலந்து பருகலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.