நோய் எதிர்ப்பு சக்தி பானம்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. எலுமிச்சை - 1 எண்ணம்
2. இஞ்சி - சிறிய துண்டு
3. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
4. மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
5. அதிமதுரம் தூள் - சிறிது
6. துளசி இலை - 5 எண்ணம்
7. தேன் - 2 தேக்கரண்டி
8. பனைவெல்லம் - 25 கிராம்
செய்முறை:
1. எலுமிச்சை பழத்தைச் சாறு பிழிந்து வைக்கவும்.
2. எலுமிச்சைச் சாறினை 250 மி.லி தண்ணீரில் கலந்து கொள்ளவும்.
3. அதில் இஞ்சியைத் தட்டி போடவும்.
4. பின்னர் அதில் மஞ்சள்தூள், மிளகுத்தூள், அதிமதுரத்தூள் மற்றும் துளசி இலைகளைச் சேர்த்துக் கொள்ளவும்.
5. அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான நெருப்பில் சூடுபடுத்தவும்.
6. கொதித்து வரும் போது, தேன், பனை வெல்லத்தூள் கலந்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.
குறிப்பு: இப்பானத்தைப் பெரியவர்கள் 50 மி. லி., சிறியவர்கள் 25 மி. லி. எனும் அளவில் ஒரு நாளைக்கு இரண்டு வேளை பருகலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.