மசாலா மோர்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கெட்டித் தயிர் - 1 கப்
2. சின்ன வெங்காயம் - 50 கிராம்
3. சீரகம் - 1 தேக்கரண்டி
4. பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
5. கறிவேப்பிலை - சிறிது
6. மல்லித்தழை - சிறிது
7. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கெட்டித் தயிரை நன்றாகக் கடைந்து, தயிரைப் போல் ஐந்து மடங்கு தண்ணீர் சேர்த்து மோராக்கவும்.
2. வெங்காயத்தைச் சிறிதாக நறுக்கி வைக்கவும்.
3. மோரில் உப்பு, பெருங்காயத்தூள், நறுக்கி வைத்த வெங்காயம் சேர்க்கவும்.
4. சீரகம், கறிவேப்பிலை, மல்லித்தழை மூன்றையும், சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்.
5. அரைத்த விழுதை மோரில் சேர்த்து நன்றாக ஆற்றி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.