சுரைக்காய் ஜூஸ்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சுரைக்காயின் நடுப்பகுதி - 1 துண்டு
2. நெல்லிக்காய் - 4 எண்ணம்
3. புதினா இலைகள் - 12 இலைகள்
4. சீரகம் - 1 மேசைக்கரண்டி
5. எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி
6. இஞ்சி - 2 சிறு துண்டுகள்
7. உப்பு - தேவையான அளவு
8. ஐஸ் கட்டி - தேவையான அளவு
செய்முறை:
1. சுரைக்காயை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். (பச்சையாகவும் பயன்படுத்தலாம்)
2. சுரைக்காய், சீரகம், நெல்லிக்காய், இஞ்சி, புதினா இலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.
3. பின்னர், அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து 3 நிமிடங்கள் அரைக்கவும்.
4. மற்றொரு கப் தண்ணீரில், எலுமிச்சை சாறு, ஐஸ் கட்டிகள், அரைத்த ஜூஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும் .
5. பின்னர், அதனை வடிகட்டி, குளிர்ச்சியாக அருந்தலாம்.
குறிப்பு:
* சுரைக்காய் ஜூஸ் அளவுக்கு அதிகப்படியாக உட்கொள்தல் கூடாது.
* சுரைக்காய் பச்சையாக இருப்பது சிலர் உடல் நலனுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.