கற்றாழை ஜூஸ்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கற்றாழை – 1 பகுதி
2. தயிர் – 1/2 கப்
3. தண்ணீர் – 1/2 கப்
4. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. கற்றாழையைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. கற்றாழையின் ஓரத்தை வெட்டி விரித்துக் கொள்ளவும்.
3. ஒரு ஸ்பூன் கொண்டு ஜெல்லை வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேமிக்கவும்.
4. பின்னர் அதை ஒரு வடிகட்டிக்கு மாற்றி, தண்ணீரில் நன்றாக அலசவும்.
5. ஜெல்லை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
6. உப்பு மற்றும் ஜெல்லை மிக்சியில் நன்றாக அரைக்கவும்.
7. பின்னர் அதனுடன் தயிர் மற்றும் தண்ணீரைச் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
8. பின்னர் டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.