மாம்பழ குல்ஃபி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பால் - 1 லிட்டர்
2. சர்க்கரை - 350 கிராம்
3. பிஸ்தா பருப்பு - 20 கிராம்
4. பாதாம் பருப்பு - 20 கிராம்
5. மாம்பழச்சாறு - 250 மி.லி
6. மாம்பழத்துண்டுகள் - சிறிது
7. குங்குமப் பூ - 3 கிராம்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் குங்குமப்பூ, பாதாம் பருப்பு மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக் கொள்ளவும்.
2. அதில் சர்க்கரையைச் சேர்த்து, பால் நன்றாகச் சுண்டும் வரைக் கொதிக்கவிடவும்.
3. மீதமுள்ள பொருட்களையும் அந்தக் கலவையில் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்துப் பாலைக் கொதிக்கவிடவும்.
4. பின்னர் அதனைக் கீழே இறக்கி ஆறவிடவும்.
5. ஆறிய கலவையை குல்ஃபி மோல்டில் ஊற்றி இரண்டு மணி நேரம் வரை பிரிட்ஜின் பிரீசரில் வைக்கவும்.
6. பின்னர் அதனை எடுத்து, மாம்பழத் துண்டு, பிஸ்தா மற்றும் பாதாம் பருப்புகளைச் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.