மாம்பழ லஸ்ஸி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மாம்பழம் - 1கப்
2. கெட்டித் தயிர் - 1/2 கப்
3. சர்க்கரை - 1 கரண்டி
4. பனிக்கட்டிகள் - சிறிது
செய்முறை:
1. மிக்ஸியில் மாம்பழத் துண்டுகள்,கெட்டித் தயிர், சர்க்கரை, 1/4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
2. லஸ்ஸி சற்று கெட்டியாக இருந்தால், அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். இனிப்பு தேவையெனில் சர்க்கரை சேர்த்துக் கொண்டு, மீண்டும் ஒருமுறை அரைத்துக் கொள்ளவும்.
3. அதன் பிறகு, டம்ளரில் ஊற்றி, பனிக்கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.