பானகம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. எலுமிச்சை -1 எண்ணம்
2. வெல்லத்தூள் - 3 மேசைக்கரண்டி
3. சுக்குத்தூள் -1/4 தேக்கரண்டி
4. ஏலக்காய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் சுத்தமான 2 கோப்பை தண்ணீர் சேர்த்து, அதில் வெல்லத்தூளைச் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
2. வெல்லத்தில் சிறிது உப்பு சுவை இருப்பதால், உப்பு சேர்க்கத் தேவையில்லை.
3. அதில் எலுமிச்சைச் சாறு, சுக்குத்தூள், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
4. பின்னர் வடிகட்டாமல், அப்படியேப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.