மக்காச்சோள ரவை கிச்சடி
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. மக்காச்சோள ரவை – 1 கப்
2. காய்கள் (பட்டாணி, கேரட், உருளைகிழங்கு, பீன்ஸ்) – ஒரு கப்
3. வெங்காயம் – 2 எண்ணம்
4. சிறிய தக்காளி – 1 எண்ணம்
5. இஞ்சி - 1 சிறிய துண்டு
6. பச்சைமிளகாய் – 5 எண்ணம்
7. எலுமிச்சம்பழ ஜூஸ் – 1 மேசைக்கரண்டி
8. கறிவேப்பிலை - சிறிது
9. மல்லித் தழை - சிறிது
10. மஞ்சள் தூள் – 1/4 சிட்டிகை
11. உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
12. எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
13. கடுகு – 1/2 தேக்கரண்டி
14. உளுத்தம் பருப்பு – 1/2 மேசைக்கரண்டி
15. கடலைப் பருப்பு – 1/2 மேசைக்கரண்டி
16. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. காய்கறிகள், வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, காய்களை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
3. மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கித் தண்ணீர் சேர்க்கவும்.
4. தண்ணீர் கொதி வந்தவுடன் எலுமிச்சம்பழ ஜூஸ், உப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து ரவையைத் தூவியது போல் கொட்டிக் கிளறவும்.
5. வாணலியை மூடி 15 நிமிடம் மிகக் குறைந்த நெருப்பில் வேகவிடவும்.
6. இடையில் ஒரு முறை கிளறிவிடவும்.
7. கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கி வைக்கலாம்.
குறிப்பு:
1. தேங்காய் சட்னி, பீர்க்கங்காய் பச்சடியுடன் பரிமாறவும்.
2. மக்காச்சோள ரவை வேகச் சிறிது நேரம் எடுக்கும், குழைவாக இருக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் கூடுதலாக அரைகப் தண்ணீர் அதிகம் சேர்க்கலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.