வெஜ் பிரைடு ரைஸ்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பிரியாணி அரிசி - 200 கிராம்
2. நல்லெண்ணெய் - தேவையான அளவு
3. வெண்ணெய் - 1மேசைக்கரண்டி
4. பட்டை - 1
5. கிராம்பு - 3 எண்ணம்
6. பூண்டு - 5 எண்ணம்
7. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
8. நறுக்கிய வெள்ளை வெங்காயம் - 1/2 கிண்ணம்
9. நறுக்கிய காலிப்பிளவர் - 1/4 கிண்ணம்
10. பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் - 1/4 கிண்ணம்
11. அஜினோமொடொ - சிறிது
12. நறுக்கிய குடைமிளகாய் - 1
13. சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
14. தக்காளி சாஸ் - 1 மேசைக்கரண்டி
15. எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
16. வெள்ளை மிளகுதூள் - 1 தேக்கரண்டி
17. மல்லித்தழை - பொடியாக நறுக்கியது - 1/2 கிண்ணம்
18. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. 1. அரிசியை உதிரியாக வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
2. எண்ணெய், வெண்ணெய் சேர்த்துக் காயவைத்து அதில் பட்டை, கிராம்பு இட்டு வெடித்ததும் பூண்டு சேர்க்கவும். அதன் பின் வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
3. தனியாகக் குடைமிளகாயை அளவாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
4. காலிப்பிளவர், முட்டை கோஸ் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். அஜினோமொடொ சேர்க்கவும்.
5. காய்கறிகள் நன்கு வதங்கிய பின் சிறிது உப்பு சேர்க்கவும். குடைமிளகாயைச் சேர்க்கவும்.
6. காய்கறிகளின் தண்ணீர் வற்றியதும் தக்காளி சாஸ்,சோயா சாஸ், எண்ணெய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
7. வேகவைத்த சாதம், உப்பு, எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், மல்லி இலை போட்டு நன்கு கிளறி சிறிது இளஞ்சூட்டில் வைக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.