இனிப்பு அவல் புட்டு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அவல் - 1 கப்
2. சீனி - 10 மேசைக்கரண்டி
3. தேங்காய்த் துருவல் - 3/4 கப்
4. உப்பு - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
1. அடுப்பில் கடாயை வைத்து, குறைவான நெருப்பில் அவலைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
2. ஆறிய பின் மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுட வைக்கவும்.
4. அடுப்பை அணைத்து விட்டு சுடு தண்ணீரை அவலோடு சேர்த்து நன்கு கிளறவும்.
5. அதனோடு தேங்காய்த் துருவலையும் போட்டுக் கிளறவும்.
6. அதன் பிறகு அந்த கலவையை இட்லி தட்டில் அல்லது புட்டு குழலில் வைத்து 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
7. வெந்ததும் ஒரு பாத்திரத்தில் அவல் புட்டு மற்றும் சீனியைப் போட்டு கிளறிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.