தக்காளி பூரி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1.கோதுமை மாவு - 250 கிராம்
2. தக்காளி - 4 எண்ணம் (பெரியதாக இருப்பின் 2 எண்ணம்)
3. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
4. நெய் - 1 தேக்கரண்டி
5. எண்ணெய் - தேவையான அளவு
6. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. தக்காளியைக் கொதிக்கும் நீரில் போட்டுச் சிறிது நேரம் கழித்து அதன் தோலுரித்து விடவும்.
2. தோலுரிக்கப்பட்ட தக்காளியை விழுதாக அரைக்கவும்.
3. கோதுமை மாவுடன், தக்காளி விழுது, மிளகாய்த்தூள் நெய், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.
4. பிசைந்த மாவைச் சிறுசிறு உருண்டைகளாக்கி வைக்கவும்.
5. மாவு உருண்டையைப் பூரியாகத் தேய்த்து வைக்கவும்.
6. வாணலியில் எண்ணெய்யைக் காய வைத்து, எண்ணெய்க் காய்ந்ததும் பூரிகளாகப் பொறித்து எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.