கொத்துப் புரோட்டா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. புரோட்டா - 2 எண்ணம்
2. முட்டை - 1 எண்ணம்
3. வெங்காயம் - 2 எண்ணம்
4. தக்காளி - 1 எண்ணம்
5. பச்சை மிளகாய்-1எண்ணம்
6. புரோட்டா சால்னா- 1 கிண்ணம்
7- பூடு - 8 பல்
8. உப்பு - தேவையான அளவு
9. என்ணெய் - தேவையான அளவு
10. கறிவேப்பிலை- சிறிது.
செய்முறை:
1. புரோட்டாவை சிறிதாகப் பிய்த்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளி, பூடு, மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகாய் மற்றும் பூடு சேர்த்துத் தாளிக்கவும்.
4. பூடு நிறம் மாறியதும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
5. அத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளற வேண்டும்.
6. அதன் பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
7. அதனுடன் புரோட்டாவிற்கான சால்னா சேர்த்து நன்கு கிளறவும்.
8. தேவையான உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.
9. கடைசியாக இந்தக் கலவையுடன் புரோட்டாவைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.