மிளகு ரசம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. புளியம்பழம்- எலுமிச்சை அளவு
2. தக்காளி பழம்- 100 கிராம்.
3. துவரம்பருப்பு- 1 தேக்கரண்டி.
4. கடுகு-1/2 தேக்கரண்டி.
5. நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி.
6. சீரகம்-1தேக்கரண்டி.
7. மிளகு-1 தேக்கரண்டி.
8. பூண்டு- 20 கிராம்.
9. வற்றல்- 4 எண்ணம்.
10. காயம்- சிறிது.
11. கருவேப்பிலை, மல்லித்தழை- சிறிது.
12. உப்பு- தேவையான அளவு.
செய்முறை:
1.அரை லிட்டர் தண்ணீரில் புளியைப் போட்டு சிரிது நேரம் ஊற வைக்கவும்.
2. அத்துடன் தக்காளிப் பழத்தை வெட்டிப் போடவும். பூண்டைத் தட்டிப் போடவும்.
3. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, வற்றல், காயம் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
4. துவரம் பருப்பு, மிளகு, சீரகம் போன்றவற்றை பொடி செய்து தாளிசத்துடன் சேர்க்கவும்.
5. பின்பு தக்காளி, பூண்டு கலந்த புளித்தண்ணீரை சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கொதித்து வரும் போது உப்பு, கருவேப்பிலை, மல்லித்தழையைப் போட்டு கிளறி விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.