கொள்ளு ரசம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கொள்ளு (கானம் என்றும் சொல்வதுண்டு) வேகவைத்த தண்ணீர் - 3 கப்.
2. சின்ன வெங்காயம் - 1எண்ணம்.
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்.
4. தக்காளி - 1எண்ணம்.
5. புளி - எலுமிச்சை அளவு.
6. கறிவேப்பிலை - சிறிது.
7. மல்லித்தளை - சிறிது.
8. பூண்டு - 3 பற்கள்.
9. கடுகு - 1/2 மேசைக்கரண்டி.
10. சீரகம் - 1மேசைக்கரண்டி.
11. மல்லி - 1/2 தேக்கரண்டி.
12. மிளகு - 1/2 தேக்கரண்டி.
13. வெந்தயம் - 4 மேசைக்கரண்டி.
செய்முறை:
1. வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
2. சீரகம், மல்லி, மிளகு, வெந்தயம் போன்றவைகளைப் பொடித்துவைக்கவும்.
3. புளியை சிறிது தண்ணீரில் ஊறவைக்கவும்.
4. கடாயில் சிறிது எண்ணெய் விட்டுக் கடுகு போட்டுத் தாளிக்கவும்.
5. நறுக்கி வைத்த வெங்காயம், நசுக்கிய பூண்டு , கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
6. நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
7. புளிக்கரைசல் மற்றும் ரசப்பொடி , உப்பு போன்றவைகளை அதில் சேர்த்து கொதிக்கவிடவும்.
8. கொள்ளு வேக வைத்த தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
9. கடைசியாக மல்லித்தளையை நறுக்கிப் போட்டுச் சேர்க்கவும்.
குறிப்புகள்:
1. இதை சூப் போன்றும் சாப்பிட முடியும்.
2. கொள்ளுவை வேகவைத்துத் தண்ணீர் எடுத்த பின்பு மீதமிருக்கும் வெந்த கொள்ளுவில் சர்க்கரை சேர்த்து உருண்டையாக உருட்டி வைத்து உணர்ந்த பின்பு சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.