பீட்ரூட் குருமா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பீட்ரூட்- 2 எண்ணம்
2. உருளைக்கிழங்கு- 1 எண்ணம்
3. காரட்- 1 எண்ணம்
4. பச்சைப்பட்டாணி (வேகவைத்தது_ – 1 கப்
5. வெங்காயம்- 2 எண்ணம்
6. தக்காளி- 1 எண்ணம்
7. காலிபிளவர்- 1 கப்
8. பட்டர் பீன்ஸ்- 1 கப்
9. நூல்கல்- 1 கப்
10. உப்பு- தேவையான அளவு
வறுத்து அரைக்க:
11. நெய்- 2 தேக்கரண்டி
12. மல்லி - 2 தேக்கரண்டி
13. வறுகடலை - 2 தேக்கரண்டி
14. முந்திரிப்பருப்பு- 1 தேக்கரண்டி
15. சோம்பு- 2 தேக்கரண்டி
16. பட்டை- 6 இலைகள்
17. கிராம்பு- 3 எண்ணம்
18. ஏலக்காய்- 4 எண்ணம்
19. பச்சைமிளகாய்- 5 எண்ணம்
20. பூண்டு- 3 பல்
21. தேங்காய் - கால் மூடி.
செய்முறை:
1. காய்கறிகளைத் தோலகற்றி தண்ணீரில் கழுவி நறுக்கிக் கொள்ளவும்.
2. வெங்காயத்தைப் பச்சை வாடை போக வதக்கவும், தக்காளி, பிற காய்களையும் சேர்க்கவும். பாத்திரத்தில் காய்கறிகள் மூழ்குமளவிற்குத் தண்ணீர் ஊற்றி வேக விடவும்,
3. பாதி வெந்ததும் அதனுடன் உப்பைச் சேர்க்கவும்.
4. ஒரு வாணலியில் நெய்யை விட்டு வறுக்கத் தேவையானவற்றில் தனியா, முந்திரிப்பருப்பு, சோம்பு, பொட்டுக்கடலையைச் சிவக்க வறுத்து, தனியே ஆற விடவும்.
5. பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், பச்சைமிளகாய், பூண்டை வறுத்துத் தனியே பாத்திரத்தில் சேர்த்து விட்டு தேங்காயைச் சிவக்க வறுத்து ஆற வைக்கவும். (இஞ்சி பிடித்தவர்கள் அதையும் சேர்த்துக் கொள்ளலாம்)
6. அதனுடன் தேவையான தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்தெடுக்கவும்.
7. காய்கள் வெந்ததும் அரைத்ததைக் கொட்டிக் கொதிக்க விடவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.