பனீர் பட்டர் மசாலா
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. பனீர் – 1 கிண்ணம்
2. பட்டர் – 1 தேக்கரண்டி
3. எண்ணெய் – 2 தேக்கரண்டி
4. வெங்காயம் -1 எண்ணம்
5. தக்காளி – 1 எண்ணம்
6. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
7. மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
8. மல்லித் தூள் – 1 தேக்கரண்டி
9. கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
10. தக்காளி சாஸ் – 1 தேக்கரண்டி
11. கறிவேப்பிலை – சிறிது
12. மல்லித்தழை – சிறிது
13. உப்பு – 1 தேக்கரண்டி
14. பால் – 1 டம்ளர்
செய்முறை:
1. தக்காளியை விழுது போல் அரைத்து வைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
3. பின்னர் அதில், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. பின் அதில் அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
5. தனியாக ஒரு பாத்திரத்தில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், கரம் மசாலா, தக்காளி சாஸ், உப்பு, பால் சேர்த்துக் கட்டிப்படாமல் கலக்கவும்.
6. அதனுடன், வதங்கிய தக்காளியுடன் பாலில் கலந்த மசாலா கலவையையும் சேர்த்துக் கிளறவும்.
7. அத்துடன் மீதமுள்ள பாலை சேர்த்துக் கொதிக்கவிடவும்.
8. பின் அதில் பனீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: சப்பாத்தி, நாண் ஆகியவற்றுக்கு இந்தப் பனீர் பட்டர் மசாலா சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.