கோவக்காய் பனீர் குழம்பு
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. கோவக்காய் (நறுக்கியது) – 3/4 கப்
2. பனீர் துண்டுகள் – 1 கப்
3. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
4. மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
5. இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
6. சீரகம் - 1 தேக்கரண்டி
7. சோம்பு – 1 தேக்கரண்டி
8. புளிக்கரைசல் – சிறிது
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு – தேவையான அளவு
பொடிக்க:
11. மல்லி – 1 மேசைக்கரண்டி
12. சீரகம் - 2 தேக்கரண்டி
13. உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
14. கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
15. மிளகு – 1 தேக்கரண்டி
16. மிளகாய் வற்றல் – 4 எண்ணம்
17. மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி.
செய்முறை:
1. பொடிக்கக்கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்துப் பொடித்து வைக்கவும்.
2. பெரிய வெங்காயத்தை விழுதாக அரைத்து வைக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் நறுக்கிய பனீ ரை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், சோம்பு, சீரகம் போட்டுத் தாளித்து, வெங்காய விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
5. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
6. அத்துடன் நறுக்கிய கோவக்காயைப் போட்டு நன்றாக வதக்கவும்.
7. பின்னர் அதில் உப்பு, மஞ்சள்தூள், வறுத்து பொடித்த மசாலாவைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
8. இதில் புளிக் கரைசலை ஊற்றித் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வறுத்த பனீரை போட்டு நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.