தக்காளி ரசம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. தக்காளி - 250 கிராம்
2. புளி - 50 கிராம்
3. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
4. சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
5. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
6. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
7. கடுகு - 1/4 தேக்கரண்டி
8. பெருங்காயத்தூள் - சிறிது
9. மல்லித்தழை (நறுக்கியது) - சிறிது
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. புளியைத் தண்ணீரில் ஊற வைத்துக் கரைத்து வடிகட்டவும்.
2. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு போட்டுத் தாளிக்கவும்.
3. அதனுடன் வடிகட்டிய புளித் தண்ணீரை விட்டு, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.
4. பிறகு, மிளகுத்தூள், சீரகத்தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
5. அதில் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.
6. எல்லாம் ஒன்றாகக் கலந்து நுரைத்து, ஒருமுறை கொதித்ததும் பெருங்காயத்தூள், மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.