கத்தரிக்காய் கொத்சு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சிறிய கத்தரிக்காய் - 1/4கிலோ
2. வெங்காயம் - 2 எண்ணம்
3. பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
4. மஞ்சள் பொடி - சிறிது
5. புளி - எலுமிச்சையளவு
6. உப்பு - தேவையான அளவு
7. எண்ணெய் - தேவையான அளவு
பொடி செய்ய:
8. கடலைப் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
9. உளுந்தம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
10. வெந்தயம் - 1 மேஜைக்கரண்டி
11. சீரகம் - 1 மேஜைக்கரண்டி
12. மல்லி - 4 மேஜைக்கரண்டி
13. மிளகாய் வற்றல் - 10 எண்ணம்
தாளிக்க:
14. கடுகு - 1/2 தேக்கரண்டி
15. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. கத்தரிக்காயை எண்ணெய் கத்தரிக்காய் செய்வது போல் நான்காக கீறிக் கொள்ளவும். (காம்பை நீக்க வேண்டாம்)
2. கீறிய கத்தரிக்காயை எண்ணைய்யில் பொறித்து வைத்துக் கொள்ளவும்.
3. புளியைத் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துச் சிறிது நேரம் கழித்துக் கரைத்துக் கொள்ளவும்.
4. பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை, ஒரு வாணலியில் தனித்தனியாக எண்ணெய்யில்லாமல் வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் அதில் வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
6. அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். அது வதங்கியதும் புளிக்கரைசல்,மஞ்சள் பொடி,உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
7. கத்தரிக்காய் சேர்த்துக் கிளறி கொடுக்கவும்.
8. அதில் வறுத்த பொடியைத் தூவி இறக்கவும்.
9. கடுகு,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதைக் கத்தரிக்காயில் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.