கடுகுக் குழம்பு
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. கடுகு - 40 கிராம்
2. சீரகம் - 1 தேக்கரண்டி
3. மிளகு- 1 தேக்கரண்டி
4. பால் பெருங்காயம் - 1 தேக்கரண்டி
5. மல்லி விதை - 50 கிராம்
6. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - சிறிதளவு
8. புளி - எலுமிச்சையளவு
9. சின்ன வெங்காயம் - 15 எண்ணம்
10. பூண்டு - 15 எண்ணம்
11. நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
12. கருவேப்பிலை - சிறிது
13. கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கடுகை சிவக்க வறுத்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.
2. சீரகம், மிளகு, பெருங்காயம், மல்லி விதை, வெந்தயம் இவை அனைத்தையும் தனித்தனியாக எண்ணெயில்லாமல் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
3. வறுத்தவைகளுடன் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
4. அரைத்த கலவையுடன் புளிக் கரைசலும் மஞ்சள் தூளும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
5. நன்கு கொதித்துச் சிறிதளவு சுண்டி, பச்சை வாசனை போன நிலையில், கடுகுப் பொடியை சேர்த்துக் கலக்கவும். (கடுகை சேர்த்த பின் கொதிக்க விடக்கூடாது)
6. வாணலியி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கருவேப்பிலை தாளித்து குழம்புடன் சேர்க்கவும்.
குறிப்பு: பிரசவித்த தாய்மார்களுக்குப் புழுங்கலரிசி சோற்றுடன் இக்குழம்பை கொடுக்கலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.