கறிவேப்பிலைக் குழம்பு
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. கறிவேப்பிலை - 1 கைப்பிடியளவு
2. சின்ன வெங்காயம் - 100 கிராம்
3. பூண்டு - 10 பல்
4. தேங்காய் - 1/2 முடி
5. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
6. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
7. பெருங்காயத்தூள் - சிறிது
8. எண்ணெய் - தேவையான அளவு
9. புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
10. கடுகு - 1/4 தேக்கரண்டி
11. உளுந்து - 1/4 தேக்கரண்டி
12. குண்டு மிளகாய் - 3 எண்ணம்
13. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயத்தைத் தோல் நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
2. புளியைத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
3. தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியை எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கிய பிறகு, இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி ஆற விடவும்.
5. நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
6. வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுந்து, குண்டு மிளகாய் சேர்த்துத் தாளித்த பின்னர் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
7. இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரைக் கிளறவும்.
8. பிறகு கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிட்டுப் பச்சை வாசனை போனதும் இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.