சொதிக் குழம்பு (அல்லது) தேங்காய்ப்பால் குழம்பு
ச. பர்வதா
தேவையான பொருட்கள்:
1. பாசிப்பருப்பு - 100 கிராம்
2. தேங்காய்- 1 பெரியது
3. உருளைக்கிழங்கு - ¼ கிலோ
4. கேரட் - ¼ கிலோ
5. முருங்கைக்காய் - 2 எண்ணம்
6. வெங்காயம் (சிறியது) - 10 எண்ணம்
7. பூண்டு - 6 பல்
8. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
9. இஞ்சி - 1 சிறிய துண்டு
10. வெந்தயம் - 1 தேக்கரண்டி
11. சீரகம் - 1 தேக்கரண்டி
12. மஞ்சள் பொடி - ¼ தேக்கரண்டி
13. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் பாசிப்பருப்பை நன்றாகக் கழுவி, மஞ்சள் பொடி சேர்த்து வேகவைக்கவும்.
2. தேங்காயைத் துருவி, அரைத்து மூன்று முறை பால் எடுத்துத் தனித்தனியாக வைத்துக் கொள்ளவும்.
3. உருளைக் கிழங்கு, கேரட், முருங்கைக்காய் ஆகியவற்றைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
4. வெங்காயத்தை உரித்து வைத்துக் கொள்ளவும்.
5. இஞ்சியை அரைத்துச் சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
6. பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
7. ஒரு கனமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் வெந்தயம், சீரகம் போட்டு, பின் வெங்காயம், பூண்டு மற்றும் காய்கறிகளைச் சேர்த்து இலேசாக வதக்கவும்.
8. பாசிப்பருப்பு அரைவேக்காடு வெந்ததும், மூன்றாவதாக எடுத்த தேங்காய்ப் பாலை அதில் விட்டு, நறுக்கி வைத்த காய்கறிகளைச் சேர்த்து வேக விடவும்.
9. காய்கறிகள் நன்றாக வெந்ததும், இரண்டாவது பாலை விட்டு, அதனோடு இஞ்சிச் சாற்றையும், அரைத்த பச்சைமி ளகாய் விழுதையும் சேர்த்துக் கொதிக்க விடவும்.
10. கொதி வந்தவுடன் மூன்றாவது பாலைச் சேர்க்கவும்.
11. இலேசாகக் கொதி வந்தவுடன் வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிச் சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.